Sunday, November 18, 2018

பதினெட்டு புராணங்கள்

வேதத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் நமது புராணங்கள் எளிய கதைகள் மூலம் எடுத்துரைத்து மக்களை தர்ம வழியில் ஈடுபட தூண்டுகின்றன அதில் 18 முக்கிய புராணங்கள் ஆகும் அவை

म - द्वयं भ - द्वयं चैव ब्र - त्रयं व - चतुष्टयम्।
अ - ना - प - लिङ् - ग - कु - स्का - नि पुराणानि प्रचक्षते॥

ம-த்வயம் ப-த்வயம் சைவ ப்ர-த்ரயம் வ-சதுஷ்டயம்।
அ-நா-ப-லிங்- க-கூ-ஸ்கா-நி புராணாநி ப்ரசக்ஷதே॥

அதாவது ம என்று ஆரம்பிக்கும் இரு புராணங்கள்

மத்ஸ்ய புராணம்,

மார்கண்டேய புராணம்

ப என்று ஆரம்பிக்கும் இரண்டு புராணங்கள்

பாகவத புராணம்,

பவிஷ்ய புராணம்

ப் என்று ஆரம்பிக்கும் மூன்று புராணங்கள்
ப்ரஹ்மாண்ட புராணம்,

ப்ரஹ்மவைவர்தக புராணம்,

ப்ரஹ்ம புராணம்

வ என்று தொடங்கும் நான்கு புராணங்கள்

வாமந புராணம்

வராஹ புராணம்

விஷ்ணு புராணம்

வாயு புராணம்

அ என்று தொடங்கும் அக்னி புராணம்

நா என்று தொடங்கும் நாரத புராணம்

ப என்று தொடங்கும் பத்ம புராணம்

லிங் என்று தொடங்கும் லிங்க புராணம்

க என்று தொடங்கும் கருட புராணம்

கூ என்று தொடங்கும் கூர்ம புராணம்

ஸ்க என்று தொடங்கும் ஸ்கந்த புராணம்

என பதினெட்டு புராணங்கள் உள்ளன.

- Prasanna Venkatraman

No comments:

Post a Comment