Sunday, September 9, 2018

மாதங்களின் வகைகள்

மாதங்களின் வகைகள்

மாதங்களை நான்கு வகையாக பிரிக்கலாம்

1.சௌரமானம்

2.சாந்திரமானம்

3.நட்சத்திர மாதம்

4.பார்ஹஸ்பத்ய மானம்

சௌரமானம்

சௌரமானம் என்பது சூரியனை அடிப்படையாக கொண்டது. சூரியன் ஒவ்வொரு ராசியிலும் பிரவேசிக்கும் போது ஒவ்வொரு மாதம் பிறக்கிறது.

சாந்திரமானம்

இது சூரியன் மற்றும் சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டது. சூரியனும் சந்திரனும் சேரும் நேரம் அமாவாசை. அமாவாசைக்கு அடுத்துவரும் பிரதமை அன்று மாதம் பிறக்கிறது.

முக்கியமான விரதங்கள் அனைத்தும் சந்திரமானப்படியே அனுஷ்டிக்கப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா தவிர பிற மாநிலங்களில் சந்திரமான மாதங்களே அனுஷ்டிக்கப்படுகிறது.

நட்சத்திர மாதம்

இது சந்திரனின் சஞ்சாரத்தை பொறுத்து அமைகிறது. சந்திரன் அசுவினி நட்சத்திரத்தில் சஞ்சாரம் தொடங்கி ரேவதி நட்சத்திர சஞ்சாரம் முடிய ஆகும் காலம் ஒரு நட்சத்திர மாதம் ஆகும்.

பார்ஹஸ்பத்யமானம்

குரு தன்னுடைய சஞ்சார காலத்தில் ஒரு ராசியில் இருக்கும் காலம் ஒரு பார்ஹஸ்பத்ய வருஷம் ஆகும்.

Saturday, September 1, 2018

கால கணிதம்

கால கணிதம்

1 நாழிகை = 24 நிமிடம்

2 1/2 நாழிகை = 1 மணி

3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்

7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்

8 ஜாமம் = 1 நாள் (பகல் + இரவு சேர்ந்து)

7 நாள் = 1 வாரம்

15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)

2 பக்ஷம் = 1 மாதம்

2 மாதம் = 1 ருது (பருவம்)

3 ருது = 1 அயனம்

2 அயனம் = 1 வருடம்

- Astro Prasanna

ராகு கேது

ராகு/ கேது.

ராகு, கேது சாய கிரகங்கள் என நமது இந்திய வேத ஜோதிடம் கூறுகிறது.

கேது ஞானகாரகன் ராகு போக காரகன்

ராகு கரும்பாம்பு என்றும். கேதுவை செம்பாம்பு என்றும் கூறுவார்கள்.

செம்மை நிறம் இருளில் இருந்து வெளிச்சம் உதயமாகும் போது வரும் (காலை பொழுது)

கருமை நிறம் வெளிச்சத்தில் இருந்து இருள் வரும் போது தோன்றும் (மாலை பொழுது)

அதனால் தான் நம் முன்னோர்கள் காலை பொழுதில் படிக்க சொன்னார்கள். ஞானம் கிட்டும் நேரம் அதிகாலை நேரம்.

மாலை நேரம்  மயக்கம் எனும் போகத்தை தரக்கூடிய காலம்.

- Astro Prasanna

கரணம்

கரணம் என்னும் வடமொழிச்சொல்லுக்கு பிரித்தல் என்று பொருள். அதாவது திதியை இரண்டாக பிரிப்பதே கரணம் என்று பெயர்.

திதியில் பாதி கரணம் என்று கூறுவார்கள். அப்படியெனில்  தேய்பிறை 15 திதி, வளர்பிறை 15 திதி என முப்பது திதிக்கு அறுபது கரணம் தானே இருக்க வேண்டும். ஆனால் நமது முன்னோர்கள் 11 கரணங்களின் பெயர்கள் தானே கொடுத்துள்ளார்கள்.

ஏனெனில் கரணங்களில் 7 சர கரணங்கள் ஆகும். இந்த சர கரணங்கள் வளர்பிறை பிரதமை திதியின் பிற்பாதியில் தொடங்கி தேய்பிறை சதுர்த்தசியின் முற்பாதி வரை 8 முறை திரும்ப திரும்ப வரும் அவை

1. பவம்
2. பாலவம்
3. கெளலவம்
4. தைதுலம்
5. கரசை
6. வணிசை
7. பத்திரை அல்லது விஷ்டி

கரணங்களில் 4 ஸ்திர கரணங்கள் ஆகும் இவை தேய்பிறை சதுர்த்தசியின் பிற்பாதி 57வது கரணம் சகுனி
அமாவாசையின் முற்பாதி 58 வது கரணம் சதுஷ்பாதம்
அமாவாசையின் பின்பாதி 59 வது கரணம் நாகவம்
வளர்பிறையின் முன் பாதி 60வது கரணம் கிம்ஸ்துக்னம்

இதில் பவம், பாவலம், கௌவலம், தைதுலம், கரசை போன்றவை சுப கரணங்கள் ஆகும்.

மீதமுள்ள வணிசை,பத்திரை, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் போன்றவை அசுப கரணங்கள் ஆகும்.

கரண தேவதைகள்

பவ                -  இந்திரன்

பாலவ          - பிரஜாபதி

கௌலவம்  -  மித்ரன்

தைதுலம்     - பித்ருக்கள்

கரசை           - பூமாதேவி

வணிசை      - ஸ்ரீ தேவி

பத்ரை           - யமன்

சகுனி            - விஷ்ணு

சதுஷ்பாதம்  - குபேர சேனாதிபதி மணிபத்ரன்

நாகவம்            - சர்ப்பம்

கிம்ஸ்துக்னம் - வாயு

கரண தேவதைகளை வணங்கி வருவதன் மூலம் காரிய சித்தி ஏற்படும்.

- Astro Prasanna