ஸ்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே
நாம் எந்த ஒரு சுப மற்றும் அபர காரியங்கள் செய்யும் முன் அன்றைய திதி, வார, நட்சத்திரங்களை சொல்லி ஸங்கல்பம் செய்து ஆரம்பிப்போம் அந்த ஸங்கல்பத்தில் கீழ்கண்ட ஒரு வாக்கியம் வரும்
ஸ்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே
இதன் விளக்கத்தை காண்போம்.
கிரதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற சதுர்யுகங்கள் இருப்பது நாம் அறிந்ததே.
ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள்
71 சதுர்யுகம் என்பது ஒரு மன்வந்தரம்
14 மன்வந்தரம் என்பது ஒரு கல்பம்
ஒரு கல்பம் என்பது பிரம்மாவுக்கு 1/2 நாள்
ஒரு கல்பத்தை 14 மனுக்கள் ஆட்சி செய்கிறார்கள். ஒரு மனுவின் ஆட்சிகாலம் ஒரு மனுவந்தரம் எனப்படுகிறது.
சுவயம்பு, சுவாரோசிஷம், உத்தமம்,தாமசம், ரைவதம், சாக்சூசம், வைவசுவதம், சாவர்ணி, தக்ச சாவர்ணி, பிரம்ம சாவர்ணி, தர்ம சாவர்ணி, ருத்திர சாவர்ணி, ரௌசிய தேவ சாவர்ணி, இந்திர சாவர்ணி ஆகிய பதினான்கு மனுக்கள் உள்ளார்கள்.
நாம் இப்போது இருப்பது ச்'வேதவராஹ கல்பத்தில் 7வது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரம் ஆகும்.
ச்வேதம் என்றால் வெண்மை எனும் பொருள் அந்த வெண்மை நிறமுடைய வராகமானது ( நாராயணரால்) பூமியை மீட்டு எடுத்ததால் இதற்க்கு ஸ்வேத வராக கல்பம் என்று பெயர்.
இதனையே நாம் ஸங்கல்பத்தில் சொல்கிறோம்.
Astro P.V. Ramanan iyer
No comments:
Post a Comment